பெரும்பாண்மையினருக்கு ஒரு சட்டம் சிறுபாண்மையினருக்கு வேறு சட்டமா? ஆதாரங்களுடன்

திருகோணமலை பஸ் தரிப்படத்துக்கும் பொது சந்தைக்கும் முன்னால் செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது
ஆனாலும் இப்பிரதான வீதி விரிவு படுத்தப்பட்டு இரண்டு வாகனங்கள் செல்லும் அளவுக்கு அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வேலையில் சில இடங்களில் இவ்வீதி ஒடுங்கி வருவதை காணக்கூடியதாக உள்ளது .
இது குறித்து பிரதான வீதியில் வசிப்பவர்களிடம் கேட்ட போது ஏன் நேராக சென்ற வீதியின் அபிவிருத்தி ஒடுங்கி உள்ளது அது குறித்து கூற முடியுமா என வினவியபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடைய வீடு காணப்படுவதாகவும் மற்றைய பக்கத்தில் சிங்கள சகோதரருடைய கடை காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர். சிங்கள சகோதரருக்கு நஷ்ட ஈடு வழங்கினால் மாத்திரம் முன் பகுதியை உடைக்க விடுவதாகவும் அத்துடன் அப்படி உடைத்தால் தனக்கு பொது சந்தை பக்கம் கதவு வரும் விதத்தில் கடையை அமைக்க அனுமதி தர வேண்டும் என கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் முடிவடைந்து வரும் சந்தர்பத்தில் இரண்டு பேருடைய இலாபத்துக்காக வேண்டி அபிவிருத்தி திட்டங்களை முடிக்காமல் இருப்பது அரச அதிகாரிகளின் முட்டாள் தனமான செயல் எனவும் புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி புனரமைப்புக்காக அப்பாவி மக்களின் காணிகள் பறி போன நிலையில் சிங்கள சகோதரருக்கு ஒரு நியதி மற்றைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நியாயமா எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே யுத்த காலத்தில் செய்த சட்டங்களை போல இனிவரும் காலங்களில் செய்யாமல் அனைவருக்கும் நியாயமாக செயற்பட வேண்டும் எனவும்வேண்டுகோள் விடுக்கின்றனர்
Share this article :
Print PDF
 
Support : Your Link | Your Link | Your Link
Proudly powered by Blogger
Copyright © 2011. 111111 - All Rights Reserved
mastemplate
Original Design by Creating Website Edited by Kompi Ajaib