உக்கிரைனின் கடற்படையை றுஸ்யா அச்சுறுத்துகின்றது: அமெரிக்கா

உக்கிரையினில் றுஸ்யா நிலைகொண்டுள்ள கடற்படையானது பயமுறுத்தல் என அமெரிக்கா எச்சரித்திருக்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்கிரைனின் கணிப்பின்படி அங்கு றுஸ்யாவினது 16,000 துருப்புக்கள் நிலைகொண்டுள்ளன எனத் தெரிகிறது.
திங்கட்கிழமை ஒபாமா நிர்வாகமானது உக்கிரைனில் றுஸ்யா மேற்கொண்ட நடவடிக்கையானது உக்கிரைனின் கடற்படையைப் பீதியடைய வைத்திருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றது. இது ஒரு பாரிய ஆக்கிரமிப்பு எனவும் தெரிவித்திருக்கின்து. அத்துடன் கடற்படை சம்பந்தமாக நடைபெற்றுள்ள ஒத்திகைகள் மேலும் பிராந்திய அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் திங்கள்கிழமை இரவ உக்கிரைன் நோக்கிச் செல்வதாகத் தெரியவருகிறது. கெறி அவர்கள் முதலில் பிரான்ஸ், இத்தாலிக்குச் செல்வார் எனவும் பிரான்சில் அவர் றுஸ்யாவின் பங்குதாரர்களைச் சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அங்கு அவர் புட்டினிடம் உக்கிரையினில் நிலைகொண்டுள்ள துருப்புக்களை விலக்கிக்கொள்ளும்படி கோரவிருக்கின்றார் எனவும் தெரிகின்றது.
அதன்பின்பு செவ்வாய்க்கிழமை கெறி உக்கிரைன் சென்றடைவார் என எதர்பார்க்கப்படுகின்றது. ஆனால் புட்டின் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லையெனத் தெரிகிறது. உக்கிரைனின் இராணுவத் தளமொன்று கருமியாவில் அமைந்துள்ளது. எனவும் அந்தத் தளத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஆயதம் தரித்த வீரர்கள் காவலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
ஓபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரியொருவரின் கருத்துப்படி கருமியாவின் முழக்கட்டுப்பாடும் றுஸ்யாவிடம் இருக்கின்றது எனவும் கருமியாவில் 6,000ற்கும் அதிகமான துருப்புக்கள் இருக்கின்றனர் எனத் தெரிவித்திருக்கின்றார். றுஸ்யாவின் படைகள் உக்கிரைனது எல்லைப் பாகங்கள், இராணுவ வசதிகள், போன்றனயாவும் றுஸ்யாவின் படைகளின் கையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Share this article :
Print PDF
 
Support : Your Link | Your Link | Your Link
Proudly powered by Blogger
Copyright © 2011. 111111 - All Rights Reserved
mastemplate
Original Design by Creating Website Edited by Kompi Ajaib