நாட்டின் சலுகைகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அனைவரையும் சரிசமமாக நடத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் சுட்டிக்காட்
அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் பிரதிபலன்கள் சகலருக்கு ஒன்றாகவும் சமமாகவும் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்காக அரசாங்கம் சிறப்பான வேலைத்திட்டங்களை செய்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.


