சர்வதேச கிரிக்கெட் சபையினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு தெரிவிக்காமையின் காரணமாகவே 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கைவீரர்கள் ஏலம் போகவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டத்தின்போது அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய மூன்று பெரிய நாடுகளுக்கு அதிக அதிகாரங்களை கொண்டதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மீதான வா
க்கெடுப்பபை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் புறக்கணித்திருந்தன. இதன் காரணமாகவே இந்தியா, இலங்கை வீரர்களை புறக்கணித்துள்ளதாக அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகிய முன்னணி வீரர்களும் எந்தவொரு ஐ.பி.எல் அணியினாலும் ஏலம் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.


